கொரோனா நோயாளர்களுக்கு
சிகிச்சையளிக்கும் வகையில்
இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு!
கொரோனா
வைரஸ் இன்று
உலக நாடுகளுக்கு
பெரும் சவாலாக
இருந்து வருகின்றது.
சுமார் 210க்கும்
மேற்பட்ட நாடுகள்
இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு
மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 160,000க்கும் மேற்பட்டவர்கள்
உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,
கொரோனா வைரஸ்
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
மற்றும் பராமரிப்பு
சேவைகளை வழங்கும்
வைத்தியர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட
சுகாதாரப் பணியாளர்கள்
பெரும் சவாலை
எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த
சவாலை எதிர்கொள்ளும்
வகையில், உள்நாட்டை
சேர்ந்தவர்களும், உலகெங்கிலும் உள்ளவர்களும் அதிநவீன மருத்துவ
உபகரணங்களை உருவாக்கி வருகின்றனர்.
அந்த
வகையில், கொழும்பு
பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு
மருத்துவ மாணவரான
தில்ஷன் அபேவர்தேனா
ஒரு CPR இயந்திரத்தை
உருவாக்கியுள்ளார். இது கொரோனா
வைரஸை தணிக்க
உதவும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
புதிய சாதனம்
சுகாதார அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி
அவர்களுக்கு, சுகாதார அமைச்சில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், சுகாதார
அமைச்சின் செயலாளர்
உள்ளிட்ட அதிகாரிகள்
பலர் கலந்துகொண்டிருந்தனர்
0 comments:
Post a Comment