ஒரு டாலருக்கும் கீழ் சென்ற
கச்சா எண்ணெயின் விலை
- வராலாற்றில் மறக்க முடியாத நாள்
அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு பீப்பா கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றதால் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உலகெங்கிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் விமானங்கள் ஓய்வு எடுத்து வருகின்றன.
இதனால் கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை நேற்று (திங்கள் கிழமை ) தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்ததாது.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு பீப்பா (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் (இலங்கை மதிப்பில் 196 ரூபாய்) கீழ் சென்றது.
அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு குறைய காரணமாக கூறப்படுதவது:-
கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு
கொரோனா காரணமாக தேவை குறைவு
உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க போதுமான இட வசதி இன்மை
கச்சா எண்ணெய்யை வாங்க வர்த்தகர்கள் விருப்பம் காட்டாமை
கச்சா எண்ணெயின் விலை ஒரு நாளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வரலாற்றில் முதல்முறையாக இப்படி சரிவை சந்தித்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
0 comments:
Post a Comment