கொரோனா தொற்று நோயாளர்களின்
எண்ணிக்கை 233
- பலாலியில் 8 நோயாளர்கள்
இலங்கையில்
கொரோனா தொற்று
நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய
தின (2020.04.14)த்தில் இதுவரையில் மேலும் கொரோனா
வைரசு தொற்று
நோயாளர்கள் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு இதற்கமைவாக நேற்றைய தினத்தில்
இதுவரை பதிவான
நோயாளர்கள் 15 ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகம் விசேட
வைத்திய நிபுணர்
அனில் ஜாசிங்க
உறுதிசெய்தார்.
இதற்கமைவாக
இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை
233 அகும்.
இறுதியாக
அடையாளங்காணப்பட்ட 14 நோயாளர்களும் கொரோனா
நோயாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள். அத்தோடு இவர்களில் ஒருவர் புத்தளம்
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்.
இவர்களில்
8 பேர் பலாலி
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிiமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்படடிருந்தவர்கள். இவர்களில் 4 பேர்
முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் பதிவாகியுள்ளனர்.
மேலும்
ஒருவர் தனிமைப்படுத்தல்
மத்திய நிலையமொன்றில்
தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபராவார்
என்றும் பணிப்பாளர்
நாயகம் விசேட
வைத்திய நிபுணர்
அனில் ஜாசிங்க
மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment