பிறந்த குழந்தைக்கு 'ஊரடங்கு'
என பெயர் வைத்த தம்பதியினர்
எமது அண்டை நாடான இந்தியாவிலுள்ள
திரிபுாராவில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் சூட்டியுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சஞ்சய், மஞ்சு தேவி. இவர்கள் திரிபுராவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர்.
ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் அங்கு அரசு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மஞ்சு தேவிக்கு அருகே உள்ள அரசு மருத்துவனைமயில் ஆண் குழந்தை பிறந்தது. ஊரடங்கின் போது பிறந்நததால் அக்குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் வைத்தனர்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் உ.பி.யில் பிறந்த பெண் குழந்தைக்கு 'சானிடைசர்' எனவும், சத்தீஷ்கரில் பிறந்த இரட்டை குழந்தைக்கு ''கொரோனா, கோவிட்'' எனவும், ஆந்திராவில் பிறந்த ஆண், பெண் இரட்டை குழந்தைக்கு ''கொரோனா குமார்'', ''கொரோனா குமாரி'' என்றும் பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment