தனிமைப்படுத்தலுக்காக நபர்களை
அழைத்து சென்ற பஸ்கள் விபத்து!
ஒருவர் பலி
தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட பஸ்களும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பஸ்கள், மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதியே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தலுக்காக அழைதுச் செல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய மூன்று பேரும் கடற்படை வீரர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தலுக்காக 100 பேரை ஏற்றிச் சென்ற மூன்று பஸ்களில் இரண்டு பஸ்கள், லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.
பஸ்கள் சம்பூர் பகுதி நோக்கிச் சென்றதாகவும் மரக்கறி லொறி கொழும்பு நோக்கிச் சென்றதாகவும், வரக்காபொல பகுதியில் வைத்து இந்த விபத்து இட்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment