கொரோனா வார்டில்
5 பூனைகள் திடீர் சாவு
எமது அண்டை நாடாண இந்தியாவிலுள்ள கேரளாவில், கொரோனா வார்டில் பிடிபட்ட, ஐந்து பூனைகள் அடுத்தடுத்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் தான், அதிகமானோரை கொரோனா பாதித்துள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில், 130 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பூனைகள் நடமாட்டம் இருந்தது. இதையடுத்து, மருத்துவர்கள், கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கவச உடை அணிந்து வந்து, பூனைகளைப் பிடித்தனர்.
ஒரு பூனை, அதன் இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து பூனைகளையும், தனி கூண்டில் அடைத்து பராமரித்தனர். இந்நிலையில், சமீபத்தில், தாய் பூனை இறந்தது. அதன் உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அடுத்த நாளே மீதமுள்ள நான்கு பூனைகளும் இறந்தன. இதன் உடல் கூறுகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அனைத்துப் பூனைகளும் இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என அங்கிருந்து கிடைக்கும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment