கொரோனா வைரஸ் தாக்குதல்
95 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 95
ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது.
வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும்
நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
செல்கிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர்
எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 15 லட்சத்து 95 ஆயிரத்து 521
பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 206 பேர் சிக்கிசை பெற்று
வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக
உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 95 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-
அமெரிக்கா - 16,454
ஸ்பெயின் - 15,238
இத்தாலி - 18,279
பிரான்ஸ் - 12,210
ஜெர்மனி - 2,451
சீனா - 3,335
ஈரான் - 4,110
இங்கிலாந்து - 7,978
பெல்ஜியம் - 2,523
நெதர்லாந்து - 2,396
துருக்கி - 908
சுவிஸ்சர்லாந்து - 948
கனடா - 504
பிரேசில்- 941
ஸ்வீடன் - 793
0 comments:
Post a Comment