உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு
2 லட்சத்து 34 ஆயிரத்து 123 பேர் பலி
  


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 8 ஆயிரத்து 678 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 34 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 63,657
ஸ்பெயின் - 24,543
இத்தாலி - 27,967
இங்கிலாந்து - 26,771
பிரான்ஸ் - 24,376
ஜெர்மனி - 6,572
துருக்கி - 3,174
ரஷியா - 1,073
ஈரான் -6,028
சீனா - 4,633
பிரேசில் - 5,901
கனடா - 3,180
பெல்ஜியம் - 7,594
நெதர்லாந்து - 4,795
சுவிஸ்சர்லாந்து - 1,737
ஸ்வீடன் - 2,586
அயர்லாந்து - 1,232
மெக்சிகோ - 1,732
இந்தியா – 1147
பெரு - 1,051 
பாகிஸ்தான் - 346
 இலங்கை - 07

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top