சவூதியில் சிறார் மரண
தண்டனை முறை ரத்து
கசையடி தண்டனையும் ரத்து
சவூதி அரேபியாவில் சிறார்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறையை
ரத்து செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவூதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவூதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர்,
முஹம்மது பின் சல்மான்
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பல்வேறு குற்றங்களுக்கு, வழங்கப்பட்டு வந்த கசையடி தண்டனையை, கடந்த சனிக்கிழமை ரத்து செய்து அந்நாட்டு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை
ரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவூதியின் இந்த
அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment