சீன ஆய்வுக்கூடத்தில் தான்
'கொரோனா' உருவாக்கப்பட்டது:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி
சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வு கூடத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாக காரணமான கொரோனா வைரசை பரப்பிய சீனாவின் பி.ஆர்.ஓ.வாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்காக அந்த அமைப்பு வெட்கப்பட வேண்டும் இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
வைரசை சீனா தான் பரப்பியது என்பதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ,
போதிய ஆதாரம் உள்ளது. உடனடியாக, 'அந்த விவரத்தை உங்களிடம் தற்போது கூற முடியாது' என்றும் தெரிவித்துள்ளார். வைரசை பரப்பிய சீனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
0 comments:
Post a Comment