பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி
பல்கலைக்கழக
அதிகாரிகளினதும்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும்
இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு
உயர்
கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு
பாடசாலை
இரண்டாம் தவணை
மே 11, திங்கள்
கிழமை ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு
முன்னர் பாடசாலை
இரண்டாம் தவணை
ஏப்ரல் மாதம்
20, திங்கள் கிழமை ஆரம்பமாகும்
என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா
வைரஸ் பரவுவதுடன்
அதனை கட்டுப்படுத்துவதற்கு
அரசாங்கம் முன்னெடுத்துள்ள
செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை
பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை
நடைபெறாத காலப்பகுதியில்
மாணவர்கள் தமது
கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு
வழங்க அரசாங்கம்
திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள்
ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு
செய்து பல்கலைக்கழக
அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு
உயர் கல்வி
அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஹான்
சமரநாயக்க
பணிப்பாளர்
நாயகம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.