நவீன ஈராக் கட்டிடக்கலை தந்தை
கொரோனாவுக்கு பலி
நவீன ஈராக் கட்டிடக்கலை தந்தை என பெயர்பெற்ற ரிபாத் சதீர்ஜி 93, (Rifat
Chadirji,) கடந்த வெள்ளிக்கிழமையன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் லண்டனில் காலமானதாக அவரது நண்பர்களும் ஈராக் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கட்டிடக்கலைஞரும் போட்டோகிராபருமான ரிபாத் சதீர்ஜி, ஈராக்கில் மிகவும் பிரபலமான, சில கட்டமைப்புகளை வடிவமைத்த பெருமைக்குரியவர். பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக்கத்தின் தற்போதைய போராட்டக்கள மையமான சுதந்திர நினைவுச்சின்னத்திற்கு அவரதுபெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 ஆம் நுாற்றாண்டின் ஈராக்கின் மாபெரும் வீரர் என அனைவராலும் இவர் போற்றப்படுகிறார்.
0 comments:
Post a Comment