சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால்
 6162  நபர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு
 வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு


நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகளில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் பிரிவில் 6162  நபர்களுக்கு ரூபா 30,810,000 நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடுப்பனவுகளில் 3114 சமுர்த்தி பயனாளிகளுக்கு மொத்தமாக 15,570,000 ரூபாவும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள 1859 பயனாளிகளுக்கு மொத்தமாக 9,295,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் விசேட தேவையுடைய 191 பயனாளிகளுக்கு 955,000 ரூபாவும், விசேட தேவையுடைய காத்திருப்பு பட்டியலில் உள்ள 136 பயனாளிகளுக்கு 680,000 ரூபாவும், முதியோர் கொடுப்பனவுகளில் 640 பயனாளிகளுக்கு மொத்தமாக 3,200,000 ரூபாவும், முதியோர் காத்திருப்பு பட்டியலில் 198 நபர்களுக்கு 990,000  ரூபாவும் ,சிறு நீரக நோயாளர்களில் 24 நபர்களுக்கு மொத்தமாக 120,000ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சகல சமுர்த்தி பயனாளிகள் குடுப்பத்திற்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் வருமானம் குறைந்த 600 குடும்பங்களுக்கும்  உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர விரைவில்  சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் கண்கானிப்பில் சாய்ந்தமருது பள்ளிவாசல்களின் அமைப்பினால் சாய்ந்தமருதில் உலர் உணவு பொதிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top