சிறையில் இருந்து திரும்பியதும்
மக்களுக்கு உணவை விநியோகிப்பேன்:
ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு
சிறையில் இருந்து திரும்பியதும் மீண்டும் மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸாரின் கடமையை செய்யவிடாது குறுக்கீடு செய்ததாக ரஞ்சன் ராமநாயக்க நேற்று முன் தினம் இரவு அவரது மாதிவெல இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்படடுள்ள மக்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க அரிசி உட்பட உலர் உணவுப் பொருட்களை விநியோகித்து வந்தார்.
இதுவரை சுமார் 3 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை தான் மக்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மாதிவெல இல்லத்திற்கு கொண்டு வரப்பட அரிசி மற்றும் காய்கறி லொறிகளை பொலிஸார் திரும்பி அனுப்பியதுடன், தன்னை பொய் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாகவும் ரஞ்சன் ராமாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை களுத்துறையில் மக்களுக்கு சமைத்த உணவை விநியோகித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவையும் கைது செய்ய பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதுடன் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment