முஸ்லிம் கர்ப்பிணியை தள்ளிவிட்ட
மருத்துவமனை ஊழியர்
குழந்தை உயிரிழப்பு
இந்தியாவில் சம்பவம்
முஸ்லிம் என்ற காரணத்தால் மருத்துவமனை ஊழியரால் அடித்து கீழே தள்ளபட்ட கர்ப்பிணி குழந்தையை பறிகொடுத்தார்.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலுள்ள புகழ்மிக்க மகாத்மா காந்தி அரசு மருத்துமனையில் தான் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாங்கோ நகரில் வாழும் ரிஸ்வானா காத்தூன் நிறைமாத கர்ப்பிணி ஆவார். வியாழனன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதுடன் பனிக்குடம் உடைந்து உதிரம் கொட்ட ஆரம்பித்தது, வாடிக்கையாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதே அரசு மருத்துவமனைக்கு சென்றவரை அங்குள்ள மருத்துவ ஊழியம் செய்யும் பெண் ஒருவர் இரத்த ஓட்டத்தோடு எதற்கு வந்தாய்? நோயை பரப்புவதற்கா? எனக்கூறி தள்ளிவிட்டுள்ளார். அப்போது ரிஸ்வானாவின் மதம் மற்றும் அவரது பிறப்பினை கொச்சைப்படுத்தி பேசியும், செருப்பைக்கொண்டு அடித்தும் அவர் விரட்டியுள்ளார். மருத்துவரில்லாத காரணத்தால் பிரசவம் பார்க்க இயலாது என கூறிவிட்டு.... ரிஸ்வானா சிந்திய ரத்தத்தை அவரே துடைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கஷ்டப்படுத்தியுள்ளார். கை கால் நடுக்கம் எடுக்கவே ரிஸ்வானா தாமாக ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அங்கு சென்றவுடன், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது எனக்கூறி அவருக்கு டிரஸிங் செய்து, குழந்தையை சுற்றி கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இது குறித்து, வீட்டின் அருகிலுள்ளவர் உதவியுடன் , மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதில் தம்மை கஷ்டப்படுத்திய மருத்துவ ஊழியரின் பெயர் தெரியவில்லை ஆனால் அங்கு பதிவாகிய சிசிடிவி காட்சிகளை காண்பித்தால் அவரை அடையாளங்காட்டுவதாக கூறினார். இச்செய்தி உடனடியாக The Wire இணையதள செய்தி ஊடகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாங்கோ நகர SSP அனூப் பிராதேயிடம் கேட்டபோது...இச்செய்தியை தாம் சமூக ஊடகம் வாயிலாக தெரிந்து கொண்டதாகவும்.. முறையான புகார் ஏதும் இதுவரை கொடுக்கப்படவில்லை எனவும் அசால்ட்டாக கூறிவிட்டு அகன்றுவிட்டார்.
ரிஸ்வானாவின் கணவர் வேறு மாநிலத்தில் தினக்கூலி என்றும் லாக்டவுன் காலத்தில் ஊருக்கு திரும்ப இயலாமல் மும்பையில் மாட்டிக்கொண்டுள்ளதாகவும் கூறுகிறார் ரிஸ்வானா. உரிய நேரத்தில் அந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்தால் எனது ஆண் குழந்தையை இழந்திருக்கமாட்டேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார் அவர்
0 comments:
Post a Comment