ஒன்றரை லட்சத்தை கடந்த
பலி எண்ணிக்கை - அதிரும் நாடுகள்
உலகம்
முழுவதும் கொரோனா
வைரஸ் தாக்குதலுக்கு
பலியானோர் எண்ணிக்கை
ஒன்றரை லட்சத்தை
கடந்தது.
கொரோனாவின்
தாக்கம் நாளுக்கு
நாள் அதிகரித்து
வரும் நிலையில்
இந்த கொடிய
வைரசுக்கு தடுப்பு
மருந்து கண்டுபிடிக்க
விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அந்த
முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில்,
உலகம் முழுவதும்
கொரோனா தாக்குதலுக்கு
பலியானோர் எண்ணிக்கை
ஒன்றரை லட்சத்தை
கடந்துள்ளது.
தற்போதைய
நிலவரப்படி, 22 லட்சத்து 40 ஆயிரத்து 202 பேருக்கு
கொரோனா பரவியுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்
15 லட்சத்து 3 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 197 பேரின்
நிலைமை கவலைக்கிடமாக
உள்ளது.
வைரசால்
பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 67 ஆயிரத்து
162 பேர் சிகிச்சைக்கு
பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், இந்த
கொடிய வைரசுக்கு
உலகம் முழுவதும்
இதுவரை ஒரு
லட்சத்து 53 ஆயிரத்து 825
பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவுக்கு
அதிக உயிரிழப்புகளை
சந்தித்துள்ள நாடுகளில் விவரங்கள் பின்வருமாறு:-
அமெரிக்கா
- 35,955
ஸ்பெயின்
- 19,613
இத்தாலி
- 22,745
பிரான்ஸ்
- 18,6813
ஜெர்மனி
- 4,193
இங்கிலாந்து
- 14,576
சீனா
- 4,632
ஈரான்
- 4,958
துருக்கி
- 1,769
பெல்ஜியம்
- 5,163
பிரேசில்
- 2,141
கனடா
- 1,310
நெதர்லாந்து
- 3,459
சுவிஸ்சர்லாந்து
- 1,325
ஸ்வீடன்
- 1,400
0 comments:
Post a Comment