சாய்ந்தமருது மயானத்தடிக்
கூட்டத்தில் நள்ளிரவு அறிவிப்பு
ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு,
சலசலப்பு, பரபரப்பு!
இது 18 வருடங்களுக்கு முன்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வழி
நடத்திச்செல்வதற்குத் தாம் நல்லதொரு சர்வாதிகாரியாகச் செயற்பட விரும்புவதாக
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி
நள்ளிரவு சாய்ந்தமருது மயானத்தடியில்
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இதற்கு அனைவரும் ஆதரவும் அங்கிகாரமும் அங்கீகாரமுமளிக்க
வேண்டும் என்று அவர் வேண்டுகோளும் விடுத்தார்.
மாலை 5.00 மணிக்கு
ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டம் இரவு 9.00 மணிக்கே தொடங்கியது.
சட்டத்தரணி எஸ். நிஜாமுதீன் (முன்னாள் உதவி அமைச்சர்) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
“முஸ்லிம் முழக்கம்“ என்று அழைக்கபடும் ஏ.எல்.அப்துல்
மஜீத் இந்தக் கூட்டத்தில் பேச எழுந்த போது நீண்ட
நேரமாக காத்திருந்து அலுத்து சலித்துப்போன
மக்களிடமிருந்து எதிர்பு அலை எழுந்து,
“ உங்கள் பேச்சைக் கேட்க நாங்கள் இங்கே
காத்திருக்கவில்லை. நீங்கள் பேசத் தேவையில்லை. நாங்கள் தெரிவு செய்த எம்.பிக்களை
பேசவிடுங்கள் என்று குரல் எழுப்பினர்.
அப்போது அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், எம்.பிக்காளான
எச்.எம்.எம்.ஹரீஸ்,அன்வர் இஸ்மாயில், கே.எம்.தெளபீக் ஆகியோர் இருந்தனர்.
மக்களின்
எதிர்ப்புக் குரலுக்கு செவிமடுக்காமல் “முஸ்லிம் முழக்கம்“ முழங்கத் தொடங்கினார். பிரச்சினை எழுந்தது.
அமைதி குழைந்தது. பரபரப்பு ஏற்பட்டது.
பதற்றமடைந்த
மக்கள் நெருக்கமாகப் போடப்பட்டிருந்த
தகரக் கதிரைகளை முன்னுக்குப் பின் நகர்த்தி தூக்கியவாறு உயிர்
பாதுகாப்புக்காக அங்கிருந்து பாதுகாப்பான
இடங்களை நோக்கி ஓடத்தயாரானார்கள்.
மேடையை நோக்கித்தான் கதிரைகள் வீசப்படப் போகின்றன
என்ற நினைப்பில் பெரிதும் அச்சமுற்றவர்கள் நாலா திசைகளிலும் ஓடத் தொடங்கினர்.
பாதுகாப்புக் கடமைகளுக்காக பெரும் எண்ணிக்கையில் அங்கு வந்திருந்த
பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும்
உஷார் அடைந்தனர்.
அந்தநிலையிலும் “ முஸ்லிம் முழக்கம் “ தொடர்ந்தும்
முழங்க முனைந்த போது மக்கள் விடவில்லை. மேடையில் இருந்தவர்களின் பணிப்பின்பேரில்
அவர் தனது பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று.
ஹரீஸ் எம்.பி பேசி மக்களைச் சாந்தப்படுத்தியமைதியை
நிலைநாட்ட உதவினார். அன்வர் இஸ்மாயில் எம்.பியும் மக்களைச்சாந்தப்படுத்த பேசினார்.
இதற்குப் பின்னர் இரவு 11.00 மணியளவில் அமைச்சர்
ரவூப் ஹக்கீம் பேச எழுந்தார்.
“ பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் “என்று கூறிப்
பேச்சைத் தொடங்க முயற்சி செய்தார். பேசுவதற்கு சொற்கள் சரியாக வராமல் சிரமப்பட்டார். அவரின் தொண்டை கரகரத்தது. சற்று
நேரம் ஒலி வாங்கிக்கு முன் அமைதியாக நின்று தொண்டையை சரிப்படுத்த முயன்றார்.
முடியவில்லை.
பின்னர் கதிரையில் அமர்ந்தார். தண்ணீர் அருந்தினார்.
அதன் பின்னர் எழுந்து சரளமாகப் பேசினார். ஒன்றைரை மணித்தியாலங்கள் பேசினார்.
தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை மூன்று என்று கூறி அவற்றைக் கூறி
பதிலளித்தார்.
கட்சித்தலைமையில் சிலருக்கு வெறுப்பு
ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம்
அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அமைச்சர் பதவிகளும்தான் என்றார்.
குறிப்பு: இது 18 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு
கூட்டம். மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பின் கட்சிக்குள் பட்டம், பதவி,
அதிகாரம் எனபன குறித்தே போட்டா போட்டி
பிரதே அவிருத்தி குறித்து நல்ல திட்டங்கள் இருக்கவில்லை. இன்றைய இளஞர்கள் அறிந்து
வைத்திருக்க வேண்டும் என்பதற்காக
0 comments:
Post a Comment