கொரோனாவால் அதிகரித்துவரும் உயிரிழப்புக்கள்
- பிரித்தானிய விஞ்ஞானிகள்
வெளியிட்ட புதிய தகவல்கள்
கொரோனா வைரஸ் தொற்றினால், பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில், 888 பேர் மரணமாகி உள்ளதாக பிரித்தானிய தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய அதிகரிப்புடன், கொரோனா பரவுகையின் ஆரம்பித்ததில் இருந்து, பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 15,464 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய வைரஸ் தாக்கத்தினால், உலக நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தில் பிரித்தானியா விளங்குகிறது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோய்க்கான சோதனைகளின் எண்ணிக்கை இதுவரை 460,437 ஆக உயர்ந்துள்ளது, எனினும் இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்டமுறை பரிசோதனைக்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது..
மேலும் தற்போது பிரிட்டனில் 114,217 நேர்மறை சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
பிரித்தானியாவில் ஏப்ரல் 12ம் திகதி முதல் சில நாட்களாக 800க்கும் குறைவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு அண்மை நாட்களாக அதாவது கடந்த 3 நாட்களாக திடீரென 800க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாவதாக புள்ளிவிபரங்கள் விபரிக்கின்றன.
இந்நிலையில் பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்,
இக் கொரோனா வைரஸ் கடந்த செப்டம்பர் மாதமே உருவாகி இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 13ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரைக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இக் கொரோனா தொடங்கியதாகத் தெரிகிறது என்ற தகவலை மரபியலாளர் டாக்டர் பீட்டர் ஃபோஸ்டர் மற்றும் அவரது குழுவினர் சேகரித்துள்ளனர்.
அவர்கள் சேகரித்ததன்படி டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நோய்த்தொற்றின் மரபணு வரலாற்றை வரைபடமாக்கி, ஏ, பி மற்றும் சி என நெருங்கிய தொடர்புடைய, மாறுபாடு உடையன என கண்டறிந்தனர்.
வகை A என்பது வெளவால்களில் காணப்பட்ட மிக நெருக்கமான மாறுபாடு என்று நம்பப்படுவதோடு அசல் மனித வைரஸ் மரபணு என்று கருதப்படுகிறது. இந்த மாறுபாடு சீன மற்றும் அமெரிக்க நோயாளிகளில் காணப்பட்டது.
விலங்குகளிடமிருந்து உருவான அசல் வைரஸைக் குணப்படுத்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
டைப் ஏ அவுஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகிறது, இருப்பினும், டைப் சி சிட்னியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இக் கொரோனா ஒரு நகரத்தில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment