குணமடைந்தவர்களுக்கு
மீண்டும் கொரோனா:
சீனாவில் அதிர்ச்சி!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு 70 நாட்களுக்கு பிறகு பரிசோதித்து பார்த்தபோது மீண்டும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து சீன மருத்துவர்கள் முற்றிலும் குழப்பமடைந்துள்ளனர். அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் காட்டாமல் நோய் தொற்று உறுதியாகி உள்ளதுதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து அடுத்தகட்டத்திற்கு நகர்வது என்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என வூஹான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்கள் 60 அல்லது 70 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நோய் தொற்று ஆளானது குறித்து விவரங்களை சீனா துல்லியமாக வெளியிடவில்லை.
இருப்பினும் இதுபோல் 12 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட தனிமை காலம் 14 நாட்கள் ஆகும்.
இது குறித்து தேசிய சுகாதார ஆணை அதிகாரி குவோ யான்ஹோங் கூறியிருப்பதாவது:
கெரோனா வைரஸ் ஒரு புதிய வகை வைரஸ். இந்த நோயைப்பொறுத்தவரை, வைரஸ் தொற்று அறியபட்டவர்களை விட அறியப்படாதவர்களே அதிகமானோர் உள்ளனர்.சீனாவில் நோயாளிகள் இரண்டு எதிர்மறை நியூக்ளிக் அமில சோதனைகளுக்குப் பிறகுதான் வீட்டிற்கு அனுப்பபடுகிறார்கள் என கூறியுள்ளார்.
இது குறித்து தென்கொரிய வல்லுனர்கள் கூறியிருப்பதாவது: நோய் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடல் பாகங்களில் கொரோனா வைரஸ் எங்காவது தங்கி இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment