18
ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
- திகைத்து நிற்கும் இங்கிலாந்து
இங்கிலாந்து
நாட்டில் கொரோனா
நேற்று ஒரே
நாளில் 763 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு
வைரஸ் தாக்குதலுக்கு
பலியானோர் எண்ணிக்கை
18 ஆயிரத்தை கடந்தது.
உலகம்
முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி
26 லட்சத்து 32 ஆயிரத்து 532 பேருக்கு வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்
17 லட்சத்து 31 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
வைரஸ்
பரவியவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 877 பேர் சிகிச்சைக்கு
பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், இந்த
கொடிய வைரசுக்கு
இதுவரை ஒரு
லட்சத்து 83 ஆயிரத்து 866 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில்
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
தற்போது அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய
நாடுகளை புரட்டி
எடுத்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில்
இத்தாலி, ஸ்பெயின்,
பிரான்சுக்கு அடுத்தபடியாக கொரோனா தற்போது இங்கிலாந்தில்
நிலை கொண்டுள்ளது.
தற்போதைய
நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து
33 ஆயிரத்து 495 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக
நேற்று ஒரே
நாளில் புதிதாக
4 ஆயிரத்து 451 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
மேலும்,
அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே
நாளில் 763 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில்
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 100 ஆக
அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment