ஊரடங்கு விவகாரம்;
துருக்கி அமைச்சர் திடீர் ராஜினாமா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு குறித்த சரியான நேரத்தில் அறிவிக்கப்படாததற்கு பொறுப்பேற்று துருக்கிய உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு நேற்று ராஜினாமா செய்தார். சோய்லு தாமதப்படுத்தி அறிவித்த ஊரடங்கு அறிவிப்பால், ஆயிரக்கணக்கான மக்களை வீதிகளில் விரைந்து செல்ல தூண்டியது. ஆகவே சமூக விலகலை சரியாக பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
சோய்லு டுவிட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
“தொற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் வார இறுதி ஊரடங்கு முடிவை அமுல்படுத்துவதற்கான பொறுப்பு எனக்கு முற்றிலும் சொந்தமானது.31 நகரங்களின் 48 மணிநேர பூட்டுதல் வெள்ளிக்கிழமை இரவு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கட்டாய முகமூடிகளை அணியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்களை சேமித்து வைக்க கடைகளுக்கு ஓடினர். இச்சம்பவத்தால் அரசின் திட்டங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின. இந்நிலையில் சோய்லு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.