இந்தியாவில் பெண் ..எஸ்.,
அதிகாரியின் கடமை உணர்ச்சி:
 பலரும் பாராட்டு

எமது அண்டை நாடான இந்தியாவிலுள்ள ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டின பெருநகர மாநகராட்சி பெண் கமிஷனர் தனது கைக்குழந்தையுடன் கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டார். இவரது கடமையுணர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலத்தில் 350-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீஜனா என்ற பெண் ..எஸ்., அதிகாரி தனது கைக்குழந்தையுடன் நேற்று அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவருக்கு கடந்த மார்ச் இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. கணவர் வழக்கறிஞராக உள்ளார். குழந்தை பிறந்த நேரத்தில் இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பிரசவ விடுப்பு எடுப்பதை தவிர்த்து விட்டு பிறந்து 22 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் நேற்று வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொண்டார். இவரது கடமை உணர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top