அமெரிக்காவை புரட்டி எடுக்கும் கொரோனா...
வைரசுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஆயிரத்து 900 பேர் உயிரிழந்ததையடுத்து
உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியிலில்
அமெரிக்கா இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக
ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 16 லட்சத்து 2 ஆயிரத்து 899 பேருக்கு
கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 148 பேரின்
நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைக்கு
பின் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 95 ஆயிரத்து 685
பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலியை தொடர்ந்து
அமெரிக்காவில் தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கோரோனா வைரஸ் அதிகம்
பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 4
லட்சத்து 68 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று
ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 536 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ்
தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 691 ஆக
அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக அளவில்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் பட்டியலில்
இத்தாலிக்கு (18 ஆயிரத்து 279 பேர்) அடுத்த படியாக அமெரிக்கா (16 ஆயிரத்து 691 பேர்)
இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment