சவூதி மன்னர் குடும்பத்தில்
150
பேருக்கு கொரோனா
நியூயார்க் டைம்ஸ் தகவல்
சவூதி மன்னர் குடும்பத்தி்ல், உயர் பதவியில்
உள்ள 12 பேர் உட்பட அரண்மணையில் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 15 லட்சத்திற்கும் அதிகமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் கொரோனாவுக்க 2,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்த
பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவூதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியில் உள்ள 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக
நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ரியாத் மாகாண கவர்னராக உள்ள
பைசல் பின் பந்தர் அப்துல் அஜீஸ் அல் சவுத், என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து
அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இவரை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சவூதி அரண்மணையில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளதையடுத்து மன்னர், பட்டத்து இளவரசர்
ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இதற்கிடையே மன்னர் குடும்பத்தில் கொரோனா பரவியுள்ளவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும் வகையில், 500 படுக்கைகள்
கொண்ட மருத்துவமனை தயார்படுத்தப்பட்டுள்ளது. சவூதி மன்னர் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் பலரும் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம். இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் செய்தி
வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.