தொடர்ந்து உயரும் உயிர்பலி;
அலறும் ஐரோப்பிய நாடுகள்
கொரோனா வைரஸ் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ், இதுவரை 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வரும் கொரோனா வைரசின் பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவின் வேகம் இன்னமும் குறையவில்லை. பிரான்சில் நேற்று ஒரே நாளில் 987 பேர் பலியாயினர். பிரிட்டனில் 980
பேர் பலியாயினர். ஸ்பெயினில் 634, இத்தாலியில்
570, ஜெர்மனியில் 160, நெதர்லாந்தில்
115 என பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐரோப்பியாவில் கொரோனாவின் தாக்கம்:
0 comments:
Post a Comment