அவுஸ்திரேலிய பிணைக்கைதிகள் அனைவரும் மீட்பு

பொலிஸ் அதிரடி



தீவிரவாதிகளிடம் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டலுக்குள் அவுஸ்திரேலியா பொலிஸ் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை நோக்கி அவுஸ்திரேலியா பொலிஸார் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் அதிரடி தாக்குதல் நடத்தி மேலும் 6 பிணைக் கைதிகளை மீட்டனர். மீட்பு நடவடிக்கையின் போது காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை பிடித்த 17 மணி நேரத்துக்கு பின் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களை சிறைப்பிடித்தவர் ஈரானை சேர்ந்த ஹரான் மோனிஸ் என தகவல்கள் தெரிவிகின்றன. ஹரான் மோனிஸ் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top