மூவின மக்களையும் ஒன்றிணைத்த மைத்திரியை
இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்
--அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவிப்பு
எம்.ஐ.முபாறக்
''இலங்கையில்
மூவின மக்களையும்
ஒன்றிணைத்து நிலையான அமைதியை உருவாக்கிய-அதற்காகப்
பெரும் தியாகம்
செய்த ஜனாதிபதி
மைத்திபால சிறிசேனவை
இந்த நாட்டு
மக்கள் ஒருபோதும்
மறக்கமாட்டார்கள்.சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைத்
தீர்த்து வைக்கும்
அவரது பனி
தொடரும் என்று
நாம் உறுதியாக
நம்புகிறோம்.''
-இவ்வாறு
சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரசின் தலைவரும் நீர் வழங்கள் மற்றும்
வடிகால் அமைப்பு
அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஏறாவூரில்
நேற்று இடம்பெற்ற
கிழக்கு ஆடைத்
தொழில்சாலை திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போது கூறினார்.அவர் அங்கு மேலும்
கூறுகையில்,
ஜனாதிபதித்
தேர்தலில் மைத்திரிபால
சிறிசேன அவர்கள்
வெற்றி பெற்றதும்
இந்த நாட்டில்
பல நல்ல
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.சிறுபான்மை இன மக்களின்
பிரச்சினைகள் பலவற்றுக்கு அவர் தீர்வை முன்வைத்துக்
கொண்டு வருவதை
நாம் காணுகின்றோம்.
வலி
வடக்கு முதல்
சம்பூர் வரை
ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தமிழர்களின் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பிலும் அவ்வாறு விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.இந்த
நாடு முழுமையான
அமைதியை நோக்கியும்
அபிவிருத்தியை நோக்கியும் இப்போது நகர்ந்துகொண்டிருக்கின்றது.அதன் தொடராகவே
இந்த கிழக்கு
ஆடைத் தொழில்சாலையின்
உதயமும் அமைந்துள்ளது.
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
ஆட்சி மாற்றத்தைத்
தொடர்ந்து பாரிய
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.கிழக்கு
ஆடைத் தொழில்சாலையும்
அதற்கு ஓர்
சான்றாகும்.வேலையில்லாப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் இப்போது உறுதிபூண்டுள்ளோம்.மிகப் பெரிய
பெரிய மாற்றங்களை-முன்னேற்றங்களை இனி
நீங்கள் காணப்
போகின்றீர்கள்.
இந்த
நல்லாட்சியின் முக்கிய பங்காளிகளான நாங்கள்,இந்த
அரசுடனான எமது
நல்லுறவை எமது
சமூகத்தின் நலனுக்காக முழுக்க முழுக்கப் பயன்படுத்துவோம்.நல்லாட்சியின் தலைவர்களான
ஜனாதிபதி மைத்திரிபாலவும்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவும் இனவாதம் அற்றவர்கள்.இந்த நாட்டின்
முன்னேற்றத்தின் மீதும் மூவின மக்களின் ஒற்றுமை
மீதும் அதீத
அக்கறை கொண்டு
செயற்படுகின்றனர்.
இவர்களின்
கரத்தை-இந்த
ஆட்சியை நாம்
பலப்படுத்துவோம்.இந்த நல்லாட்சியின் ஊடாக எமது
சமூகத்துக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்வோம்.அனைத்துப் பிரச்சினைகளையும்
தீர்த்துக்கொள்வோம்.கிழக்கு ஆடைத்
தொழில்சாலை போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களை
நாம் தொடர்ந்தும்
முன்னெடுப்போம்.-என்றார்.
0 comments:
Post a Comment