தெறி - விமர்சனம்

விஜய் - சமந்தாஎமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 

உருவாகியுள்ள தெறி படம் பெரியஎதிர்பார்ப்புடன் இன்று 

வெளியாகியுள்ளது அந்த எதிர்பார்ப்பைஎல்லாம் படம் பூர்த்தி 

செய்துள்ளதா? என்பதை பார்ப்போம்.

கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல்.
ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள்.

இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட விஜய் போக வேண்டியிருக்கிறது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர விஜய் தயங்குகிறார். இதனால், ரவுடி மீதான புகாரையும் வாபஸ் பெற முடிவெடுக்கிறார்.
இருப்பினும் போலீஸ் அந்த ரவுடியை கைது செய்ய இவரை புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறது. அப்போது, அங்கு வரும் போலீஸ்காரர் ஒருவர் விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அப்போது விஜய்யை அவரது பழைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் உணர்வை பார்த்து எமி ஜாக்சன் அவர் மீது சந்தேகப்படுகிறார். அந்த போலீஸ்காரர் சொன்ன பெயரை வைத்து இணையதளத்தில் தேடும்போது விஜய் பற்றிய பழைய உண்மைகள் வெளியே வருகிறது.
இதன்பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று பிளாஸ்பேக் விரிகிறது. விஜய் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக நான் கடவுள் ராஜேந்திரன். அம்மா ராதிகா மீது பாசம் கொண்ட பையனாக இருக்கும் விஜய், அந்த ஊரில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான அதிகாரியாக வலம் வருகிறார். இவருக்கும் டாக்டராக வரும் சமந்தாவுக்கும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க பின்னர், விஜய்யின் நேர்மையான குணம் தெரிந்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார். பின்னர், விஜய்யும் அவரை காதலிக்க தொடங்குகிறார்.
இந்நிலையில், ஐடி கம்பெனியில் வேலை பார்த்த தன்னுடைய பெண் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஒரு பெரியவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கும்போது, அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். உயிருக்குப் போராடிய நிலையில் அவளை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் விஜய். மரணம் நெருங்கும் தருவாயில் குற்றவாளி யார் என்பதை அந்த பெண் கடைசி வாக்குமூலமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறாள்.
குற்றவாளி மிகப்பெரிய அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும் அவனை கைது செய்ய நேரடியாக அவர் வீட்டுக்கு போகிறார். ஆனால், அவர்களோ தங்களுடைய மகன் இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், மொட்டை ராஜேந்திரன் இதுவெல்லாம் பெரிய இடத்து பிரச்சினை, எப்படியும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த தருணத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி தரும்படியான ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்

அது என்ன? அந்த குற்றவாளி கிடைத்தானா? விஜய்-க்கு அடுத்து என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்? விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு தெறியுடன் விவரித்திருக்கிறார்கள்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top