தலைநகரில் நிமிர்ந்து நிற்கின்ற தாருஸ்ஸலாம்
எனக்கு பெருமையாக இருக்கின்றது
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் 1998.11 20
உடைத்து கட்டவேண்டும்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2007.02.12
பல
இன மக்களினதும்
ஐக்கியத்திற்காக தலைநகரில் நிமிர்ந்து நிற்கின்ற (தாறுஸ்ஸலாம்)
சாந்தி இல்லம்
பல இன
மக்களினதும் உழைப்பைக் கொண்டும், பண உதவிகளைக்
கொண்டும் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இந்த இல்லத்தை
நிர்மாணிப்பதற்கு என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க, ரணில் விக்கிரம்சிங்க, சிவசிதம்பரம் ஐயா,
டக்ளஸ் தேவானந்தா
போன்றோர் பண
உதவி செய்திருக்கிறார்கள்.
ஏன் ஜப்பான்
நாடு கூட
பண உதவிகளைச்
செய்திருக்கின்றது.இப்படிச் சொல்வதில்
எனக்கு பெருமையாக
இருக்கின்றது.
இவ்வாறு
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் சாய்ந்தமருது
ஜும்ஆப் பள்ளிவாசல்
முன்றலில் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
20 அம் திகதி
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தாருஸலாத்தைப் பற்றி பேசுகையில் பெருமையாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27வது பேராளர் மாநாடு 2017.02.12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற போது கட்சியின் தற்போதய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தாருஸலாத்தை உடைத்து கட்டவேண்டும் என, பேராளர்கள் போராளிகள்., முன்னிலையில் தெரிவித்துள்ளார். அதற்கும் கை தட்டல்கள் கிடைத்திருக்கின்றது.

0 comments:
Post a Comment