2016-ம் ஆண்டின்
உலகின் சிறந்த
பத்திரிகை புகைப்படம்
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19-ம் திகதி துருக்கியில்,
ரஷ்ய தூதர்
மேடையில் படுகொலை
செய்யப்பட்டதைத் தில்லாக படம்பிடித்தார் அசோசியேடட் பிரஸ்
புகைப்படக்காரர் புர்ஹான்
ஒபிலிஸி. அந்தப்
புகைப்படத்தை 2016-ம்
ஆண்டின் சிறந்த
பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
துருக்கியில்
கடந்த டிசம்பர்
மாதம், மேடையில்
பேசிக் கொண்டிருந்த
ரஷ்ய தூதர்
ஆண்ட்ரெய் கார்லோவை,
மெவ்லுத் மெர்ட்
அல்டின்ட்டாஸ் சுட்டுக் கொன்றுவிட்டு, கையில் துப்பாக்கியுடன், ’Don't
forget Aleppo!’ என உரக்க கோஷமிட்டார்.
இந்த
காட்சியை கண்டு
அங்கிருந்தவர்கள் பயத்தில் உறைந்து போய் நின்ற
சமயத்தில், சற்றும் கலக்கமடையாமல் அந்த காட்சியை
தன் கேமராவில்
பதிவு செய்தார்
அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர் Burhan Ozbilici.
இந்த
புகைப்படத்தையும், பதிவு செய்தவரின்
தைரியத்தையும் வரலாறு பேசும் என்று முன்னர்
செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
செய்தி உண்மையாகும்
வண்ணம் அப்புகைப்படம்
வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது.



0 comments:
Post a Comment