வடமேல் மாகாணத்துக்கு நீரை வழங்கும் திட்டம்

ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

வடமேல் மாகாண மக்களின் நீருக்கான நீண்டகாலத் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் வடமேல் மாகாணத்திற்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமான வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் இன்று 13 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் மேலதிக நீரினால் வடமேல் மாகாண குளங்களை போசிப்பதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இந் நிகழ்ச்சித்திட்டம் மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் இறுதிக்கட்ட செயற்பாடாகும்.
வேமெடில்ல இடதுபுற கால்வாய் நிலத்தில் மண்ணை வெட்டி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் அதன்போது ஆரம்பித்துவைத்தார்.
இத்திட்டத்தின் காரணமாக காணிகளை இழந்தவர்களை மீள்குடியேற்றும் செயற்திட்டத்தின் கீழ் காணி உறுதிகளும் ஜனாதிபதி அவர்களால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, அநுர பிரியதர்சன யாப்பா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர்களான லக்ஷ்மன் வசந்த பெரேரா, தாரானத் பஸ்நாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top