தமிழகத்தின் 21வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால்
தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
காலை 11.30 மணியளவில் ஆளுநர் மாளிகையை வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி
மற்றும் அவரது குழுவினர், ஆளுநரை சந்தித்து பேசினர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த
சந்திப்பின் முடிவில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர்
ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 14-ம் திகதி கொடுத்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தின்
அடிப்படையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று மாலை 4
மணிக்கு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார்.
0 comments:
Post a Comment