கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்

சங்க ஒன்றியத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை



கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த 29.01.2017 அன்று அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் ஒன்றுகூடலை நடாத்தியது.

அதில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அவையாவன,

பட்டதாரிகளின் திறமைகளை ஒரு போட்டிப்பரீட்சை மூலம் அறிந்து கொள்ள முடியாது. ஆகையால் பட்டதாரி நியமனங்களை போட்டிப் பரீட்சையின்றி நேர்முகப்பரீட்சைகள் மூலம் தகுதிகளைக் கண்டறிந்து நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
பட்டதாரி நியமனங்கள் அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பதுடன், பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
பட்டதாரி நியமனங்களுக்கு விண்ணங்கள் கோரப்படுகையில் ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கப்பட அனுமதிக்கப்படக் கூடாது.
கடந்த அரசாங்கத்தினால் 2012.03.31 வரையான வேலையற்ற பட்டதாரிகள் நேர்முகப் பரீட்சைகள் மூலமே அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அதேபோன்று எஞ்சியுள்ள வேலையற்ற பட்டதாரிகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் தகைமையுடையவர்களை முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கத்தினால் முடியுமெனின், ஏன் பட்டதாரிகளை அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டிலேயே அவர்களுக்கான நியமனங்களை வழங்க மத்திய அரசு அல்லது மாகாண அரசு தயக்கம் காட்டுகின்கிறன.
அண்மையில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகள் பெற்று சித்தியடைந்தவர்களை தவிர்த்து, மீதமாகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை பட்டம் பெற்ற வருடத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கி நேர்முகப்பரீட்சைகள் மூலம் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
கடந்த காலங்களில் மத்திய அரசு வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி வந்தமையினால் தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டுகின்றன.
பட்டதாரிகள் நிராகரிக்கப்படுகின்றார்கள். ஆகவே எங்கலுக்கான தொழில்வாய்ப்புக்கள் அரசினாலே வழங்கநடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். போன்ற விடயங்கள் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் ஆகியோர் ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோவை திருமலை ஆளுநர் அலுவலகத்தில் ஒன்றிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


நாளை காலை அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top