சட்ட விரோத 264  புகையிலைத்தூள் மூட்டைகள்

மறைத்து வைத்திருந்த நபருக்கு 12 இலட்சம் அபராதம்

264 புகையிலைத்தூள் மூட்டைகளை சட்ட விரோதமான முறையில் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த நபருக்கு மதுவரித் திணைக்களத்தினால் 12 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூட்டைகளை நேற்று புதன்கிழமை காலை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள உதவி மதுவரி ஆணையாளர் கே.ஜி.எம்.பண்டார வருகைதந்து இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top