தகவல் அறியும் சட்டம் இன்று 3 ஆம் திகதி முதல் அமுல்
தகவல்
அறியும் உரிமைச்
சட்டம் இன்று
முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
கயந்த கருணாதிலக்க
தெரிவித்துள்ளார்.
இதன்மூலம்
அரசாங்கம் நிதியை
பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும்
விதம் தொடர்பாகவும்
மக்கள் தகவல்களை
அறிந்து கொள்ள
முடியும் என்று
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்
அறியும் உரிமை
தொடர்பான சட்டம்
அமுலாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்
தேர்தல் உறுதிமொழியை
நிறைவேற்றும் வகையில் இன்று 3 ஆம் திகதி முதல்
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை,
அரசாங்கம் வெளிப்படைத்
தன்மையுடன் ஆட்சி நடைமுறையை முன்னெடுத்து செல்கிறது.
இந்த
நிலையில், மக்களுக்கு
மறைக்க வேண்டிய
விடயங்கள் எதுவும்
இல்லை என்றும்
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்
அறியும் உரிமைச்
சட்டம் தொடர்பாக
அதிகாரிகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும்
அமைச்சர் கயந்த
கருணாதிலக மேலும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment