'தேசிய ஒற்றுமை' என்ற தொனிப்பொருளில்
69வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் பூர்த்தி
69 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமரிசையாக நடத்துவதற்கான
சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன
தெரிவித்துள்ளார்.
இம்முறை 'தேசிய ஒற்றுமை' என்ற தொனிப்பொருளில் விழா நடைபெறவுள்ளதாக
அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டார்.
விழா ஏற்பாடுகள் பற்றி செய்தியாளரிடம் அமைச்சர் தெரிவிக்கையில்
,
சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை 8.00 மணிக்கு காலிமுகத்திடலில்
ஆரம்பமாகும். மாவட்டமட்டத்தில் 23 வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில்
இயங்கும் இலங்கைத் தூதரகங்களும் சுதந்திர தின விழாக்களை ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர்
வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டார்.
புத்தசாசன அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ உரையாற்றுகையில்,
இன மதநல்லிணக்கத்தை முன்னிறுத்தி சுதந்திரதின விழா ஏற்பாடு நடைபெறுவதாக
தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று காலை கொழும்பு பொல்வத்த தர்மகீர்த்தியாராம
விஹாரையில் பௌத்த மதஅனுஷ்டானங்களும், கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இந்து
மதஅனுஷ்டானங்களும், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய பிரார்த்தனைகளும், திம்பிரிகஸ்யாயதெரேசா
தேவாலயத்தில் கத்தோலிக்க மத ஆராதனைகளும், பொரள்ள சென் லூக் தேவாலயத்தில் கிறிஸ்தவஆராதனைகளும்
இடம்பெறும்.
சுதந்திரதினத்தன்று காலை 7.00 மணிக்கு மஹாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின்உருவச்சிலைக்கு
மலர்மாலை அணிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment