சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை;

10 வருடம் தேர்தலில் நிற்க முடியாது


சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்று பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்கு பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர். இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் திகதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் திகதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.
இதற்கிடையில், கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்..,க்கள், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா நேற்று அங்கேயே தங்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது அண்ணி இளவரசி, ஜெ.,யின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர், வருமானத்துக்கு மீறி, 66 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, 1996ல் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, பல்வேறு தடைகள், இடையூறுகளுக்கு பின், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி, மைக்கேல் டி குன்ஹா, நான்கு பேரும் குற்றவாளிகள் என, 2014, செப்., 27ல் தீர்ப்பு வழங்கினார். நால்வருக்கும், தலா, நான்காண்டுகள் சிறை தண்டனையும்; ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய்; மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை
* 1996 ஜூன், 14 - தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன்சாமி, கவர்னரிடம் புகார் மனு அளித்தார்.

* ஜூன், 18 - அப்போதைய, தி.மு.., தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதாவுக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது
* 1997 ஜூன், 4 - ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

* 2001 மே, 14 - ஜெயலலிதா தலைமையிலான, .தி.மு.., மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது
* 2003 பிப்., 28 - நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்யும் வகையில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி, தி.மு.., பொதுச் செயலர், அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்

* நவ., 18 - வழக்கு விசாரணையை, கர்நாடக மாநிலம் பெங்களூரு கோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

* 2005 மார்ச்சில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், விசாரணை துவங்கியது

* 2014 செப்., 27 - ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரையும், 'குற்றவாளிகள்' என, பெங்களூரு கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அன்றே, பரப்பன அக்ரஹாரா சிறையில், அனைவரும் அடைக்கப்பட்டனர்

* செப்., 29 - ஜெயலலிதா சார்பில், கர்நாடகா ஐகோர்ட்டில், அப்பீல் மனுவும், ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது

* அக்., 7 - ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை, கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

* அக்., 17 - ஜெயலலிதா உட்பட நால்வருக்கும், சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது

* அக்., 18 - ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரும், 21 நாள் சிறை வாசத்திற்குப் பின், ஜாமினில் வெளிவந்தனர்

* 2015 மே, 11 - ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்து, கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பளித்தது

* ஜூன், 23 - கர்நாடகா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அந்த மாநில அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது

* மே, 23 - .தி.மு.., தமிழக சட்டசபை தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது; ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார்

* 2016 செப்., 22 - உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

* டிச., 5 - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, மரணம் அடைந்தார்


* 2017பெப்., 13 - கடந்த, 2016 ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்து.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top