சசிகலா
இருக்கும் கூவத்தூர் விடுதியில்
அதிரடிப்படை
வீரர்கள் நுழைந்தனர்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி
செய்யப்பட்டதையடுத்து, அவர்
தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப்படை பொலிஸார் நுழைந்தனர்
கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட் சொகுசு விடுதியில்
எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா தங்கியிருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அவர்
குற்றவாளி என்றும், 4 ஆண்டு
சிறைத்தண்டனை உறுதி என்றும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அத்துடன் சசிகலாவை சரண்
அடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. ஏராளமான பொலிஸார் இன்று குவிக்கப்பட்டனர். பொலீஸ் உயர் அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சொகுசு விடுதியை நோக்கி பொலிஸ் அதிகாரிகளின்
வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதன் காரணமாக சசிகலா உடனடியாக கைது செய்யப்பட
உள்ளதாக அங்கு தகவல் பரவி இருக்கிறது.
ஆம்புலன்ஸ் வாகனங்களும் கூவத்தூர் விடுதிக்கு சென்றன.
இதனால் கூவத்தூர் விடுதியை உள்ள சுற்றியுள்ள பகுதிகளில் உச்சக்கட்ட பரபரப்பும்
பதற்றமும் அதிகரித்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட அதிரடிபடை வீரர்கள் விடுதிக்குள்
சென்றுள்ளனர்.


0 comments:
Post a Comment