இலங்கையில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை
ஒரு கோடியே 56 இலட்சத்து 11 ஆயிரத்து 964 ஆகும்
2016ஆம் ஆண்டுக்கான
வாக்காளர் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள
வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு
கோடியே 56 இலட்சத்து 11 ஆயிரத்து 964 ஆகும் என
அறிவிக்கப்படுகின்றது.
இது 2015 ஆம் ஆண்டு வாக்காளர்
இடாப்புடன் ஒப்பிடுகையில் இத்தொகை ஒரு இலட்சத்து
90 ஆயிரத்து 759 இனால் அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டின்
வாக்காளர் இடாப்பிற்கு அமைய ஆகக்கூடுதலான வாக்காளர்கள்
கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தொகை
17 இலட்சத்து 50 ஆயிரத்து 310 ஆகும்.
ஆகக்குறைந்த வாக்காளர் எண்ணிக்கைப் பதிவு திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இங்கு இரண்டு இலட்சத்து 68 ஆயிரத்து 96 பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர்.
இரண்டாவது
இடமாக கொழும்பு மாவட்டம் இடம்பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 43 ஆயிரத்து 713 ஆகும்.
வன்னி
மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 69 ஆயிரத்து
115 ஆகும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான
வாக்காளர் இடாப்பின் அடிப்படையிலேயே இந்த வருடத்திறகான தேர்தல்கள்
அனைத்தும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment