முஸ்லிம் காங்கிரஸ்தவிசாளர் பதவியிலிருந்து

பஷீர் சேகுதாவூத் நீக்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத்தை இடைநிறுத்துவதென, அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று 4 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்துவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று, கட்சியின் பிரதிச் செயலாளரும் பிரபல சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் உயர்பீடக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆயினும், பஷீர் சேகுதாவுதை  தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்த முடிவெடுத்துள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top