ஹெலிகொப்டர் வசதியுடனான
7 நட்சத்திர வீட்டுத்தொகுதி!
பம்பலப்பிட்டியவில் நிர்மாணிக்கத் திட்டம்
வரலாற்றில் முதல் முறையாக ஹெலிகொப்ட்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டு தொகுதி ஒன்றின் நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பம்பலபிட்டியவில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீட்டுத்தொகுதி, மிகவும் உயரமானதாக அமையவுள்ளது.
ACHILLEION என பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
30 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீட்டு திட்டத்தை 2020ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
வீட்டு தொகுதிக்கு மேல் பகுதியில் ஹெலிகொப்டர் முற்றம் ஒன்றும் நிர்மாணிக்கப்படுகின்ற நிலையில், தனிப்பட்ட ஹெலிகொப்பட்டர் ஒன்று குடியிருப்பாளர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ளது. நிலையில், 5 மோட்டார் வாகனங்கள் இதற்காக ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு கோபுரங்களிலான இந்த கட்டடத்தில் 54 மாடிகள் மாடிகளில் 584 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இலங்கையில் முதலாவது வான் பாலம், முதல் விமான நீச்சல் தடாகம் மற்றும் பாரிய பல்கலைக்கழகம் மற்றும் தனிப்பட்ட திரையரங்கமும் இந்த வீட்டுத் தொகுதியில் உள்ளடக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment