தேசிய சுதந்திர தின விழாவில் கடந்த ஆண்டில் போன்று
இவ்வாண்டிலும்தமிழ் மொழியிலும் தேசியக் கீதம்.
தமிழ் மொழி பேசும் மக்கள் மகிழ்ச்சி
காலி
முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின்
69 வது சுதந்திர
நாள் நிகழ்வுகளின்
இறுதியில் கடந்த ஆண்டில் போன்று இவ்வாண்டிலும் தமிழிலும் தேசிய கீதம்
பாடப்பட்டது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன காலையில், இலங்கையின் தேசியக்கொடியை
ஏற்றி வைத்தார்.
அதையடுத்து சிங்களத்தில் தேசிய கீதம் வழக்கம்
போலப் பாடப்பட்டது.
அதையடுத்து,
ஜனாதிபதியின் உரை, முப்படைகளினதும் இராணுவ அணிவகுப்புகள்
இடம்பெற்றன.
இந்த
நிகழ்வுகளின் முடிவில், காலை 11.15 மணியளவில் தமிழில்
தேசிய கீதம்
பாடப்பட்டது. அத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இலங்கையின்
வரலாற்றில் 1949 ஆம் ஆண்டிற்குப் பின்னர், கடந்த ஆண்டு
இடம்பெற்ற 68 வது சுதந்திர நாள் நிகழ்விலும், தமிழில் தேசிய
கீதம் பாடப்பட்டது.
அத்துடன், ஜனாதிபதியின்
உரை முடிந்த
பின்னர், விழா
அரங்கில், அதன்
தமிழ் மொழி
பெயர்ப்பும், வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது.
ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற அமைப்புக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில போன்ற சில அரசியல்வாதிகளும் போர்க்கொடி உயர்த்தினர்.
விசாரணையின் இறுதியில் அந்த மனு உச்சநீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல தடைகளை தாண்டி தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
0 comments:
Post a Comment