%J}h; tyaf;fy;tpg; gzpg;ghsuJ tuk;GkPwpa nra;wghLfSf;F
 vjpuhd rk;gtq;fSf;F fpof;F khfhzf;fy;tp mikr;Rk;>
gpujk rl;l MNyhrfUk; nghWg;Ngw;f Ntz;Lk;

(K`k;kl; m];yk;)


மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கெதிராக அவ்வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளரால் நிகழ்த்தப்படுவதாகக் கூறப்படும் அவமதிப்புகளுக்கும், அவமானங்களுக்கும், மத நிந்தனைகளுக்கும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சும், கிழக்கு மாகாணப்பிரதம சட்ட உத்தியோகத்தரும் பொறுப்பேற்று அதற்கான பரிகாரத்தை காண வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் .எல்.முஹம்மட் முக்தார் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                                                 
இது தொடர்பாக ஜனாப். முக்தார் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் தற்போதைய மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சமயம் சம்மாந்துறை வலய ஆசிரியர்கள், அதிபர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 2010ம் ஆண்டு ஜீன் மாதம் இடம்பெற்ற உயர்மட்டக்கூட்டமொன்றின் போது சம்மாந்துறை வலய அதிபர்களாலும், ஆசிரியர்களாலும், பொதுமக்களாலும் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்.

இதன் பின்னர் இவர் மானமுள்ள எவரும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றமாட்டார்கள் என ஊடகங்களுக்குத் தெரிவித்து பின்னர் அவரது ஆதரவாளர்கள் சிலரைக் கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கமைய மீண்டும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றினார். இவர் இவ்வாறு கடமையேற்ற பின்னர் ஏற்கனவே தாக்கப்பட்ட சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு அதிபர்களையும், ஆசிரியர்களையும்' கடுமையாக பழிவாங்கவும், துன்பப்படுத்தவும் தொடங்கினார். இவரது இச்செயற்பாடு சம்மாந்துறை பிரதேச அரசியல்வாதிகளுக்கு பெரும் தலையிடியாக அமைந்தது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயம் வேட்பளாராக களமிறங்கிய தற்போதைய சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் தேர்தல் மேடைகளில் தான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் உடனடியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரை இடமாற்றுவதாக அதிபர், ஆசிரியர்களுக்கு வாக்குறுதியளித்தார். அவர் வாக்குறுதியளித்தவாறு இவரை இடமாற்றம் செய்ய முயற்சிகளை எடுத்தபோது கிழக்கு மாகாண மேல்மட்டத்தில் அதாவது முன்னாள் ஆளுனர் மொகான் ஜயவிக்ரம உடன் இவருக்கிருந்த நெருக்கமான தொடர்பு காரணமாக இவரை இடமாற்றம் செய்ய முடியாமல் போனது.

இதனையடுத்து சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் இவரால் புரியப்பட்ட தளபாட திருத்த மோசடி தொடர்பான விசாரணையொன்று 2013ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.பாஸ்கரன் தலைமையிலான மூவரடங்கிய குழுவினரின் சிபாரிசுக்கமைய மேலதிக ஒழுக்காற்று விசாரணைக்காக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இணைப்புச் செய்யப்பட்டார். இவ்வாறு இணைப்புச் செய்யப்பட்டவர் முன்னாள் ஆளுனரின் செல்வாக்கு, முன்னாள் கல்விச் செயலாளர் திரு. புஸ்பக்குமரா அவர்களுடனான நெருக்கம் காரணமாக அப்போது கடமையிலிருந்த மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. விஜயானந்தமூர்த்தி என்பவரை அகற்றிவிட்டு அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போன்று இவரது அடாவடித்தனங்கள் காரணமாக மூதூர் அதிபர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக இவர் 06 மாதங்களுக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக மீண்டும் இவர் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டு தனது சேவைத்தரத்தை விட குறைந்த தரப்பதவியான உதவிச் செயலாளர் தரத்தில் இணைப்புச் செய்யப்பட்டார். இவ்விடத்திற்கு செல்வி. அகிலா கனகசூரியம் என்பவர் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் இவர் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சில் இருந்து கொண்டு மீண்டும் மூதூர் ஆசிரியர்களுக்கும், சம்மாந்துறை வலய ஆசிரியர்களுக்குமிடையிலான பழிவாங்கும் படலத்தையும், தமக்கு எதிரானவர்களுக்கு எதிரான பழிவாங்கும் படலத்தையும் மேற்கொண்டார். இந்நிலையில் இவரை கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சில் தொடர்ந்து வைத்திருக்க முடியாத நிலை உருவானது. இவ்வாறான சூழ்நிலையில் இவர் தன்னை மூதூர் வலயத்திலிருந்து அகற்றியமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து கல்முனை மாகாண மேல்நீதிமன்றில் ர்ஊஃமுடுஃநுPஃறுசவைஃ1392015 எனும் இலக்கத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.


இவ்வழக்கில் கிழக்கு மாகாண சபையின் சார்பில் ஆஜரான பிரதம சட்ட உத்தியோகத்தர் இவர் என்ன காரணத்திற்காக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டார் என்ற விடயத்தை நீதிமன்றிற்கு தெரிவிக்காமல் உண்மையை மறைத்து திரு. மன்சூருக்கு ஆதரவாக நடந்து கொண்டு நீதிமன்றில் ஒரு இணக்கப்பாடi; ஏற்படுத்திக்கொண்டு அவருக்கு மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை பெற்றுக்கொடுத்தனர்.

ஜனாப். மன்சூர் இயற்கையாகவே மதநம்பிக்கையற்றவர். இவர் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சமயம் அங்கு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றிற்கு பிரபல நாஸ்திகரான விஞ்ஞானி ஐன்ஸ்டைன் என்பவரின் பெயரைச்சூட்டியுள்ளார். சம்மாந்துறை கல்வி வலயம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கல்வி வலயமாகும். இவ்வாறான ஒரு வலயத்தில் நாஸ்திகரின் பெயரை மண்டபத்திற்கு சூட்டிய இவர் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் மதக்கடமைகளையும் மீறுவதென்பதும் ஒன்றும் புதிய விடயமல்ல.

இவ்வாறான குணம் கொண்ட ஒருவரை மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமித்தமைக்கு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சும், கிழக்கு மாகாணப்பிரதம சட்ட உத்தியோகத்தரும் பொறுப்பேற்று அங்குள்ள மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். உண்மையை மறைத்து இவ்வாறான ஒரு செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் பின்தங்கிய வலயமான மூதூர் கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்கும், அங்குள்ள அதிபர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பிற்கும் மண் போட்டுள்ளனர்.

மூதூர் கல்வி வலயம் தமிழ்ப்பாடசாலைகளை கூடுதலாகக் கொண்ட போதும் மாணவர் எண்ணிக்கையும், ஆசிரியர் எண்ணிக்கையும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. எனினும், 1998ம் ஆண்டு மூதூர் கல்வி வலயம் உருவாக்கப்பட்ட போது தமிழர்களுக்காகவும், தமிழர் ஒருவர் வலயக்கல்விப் பணிப்பாளராக இருக்க வேண்டும் என்பதனையும் நோக்காகக் கொண்டிருந்தது. இதனை சீரழிக்கும் விதத்தில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் ஒரு தமிழராக இருந்த போதும் அங்கு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இருந்த போதும் மூதூர் வலயத்தின் உண்மையான வரலாறைத் தெரியாமல் நடந்து வருகின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜனாப். மன்சூர் கடமையாற்றிய அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், சம்மாந்துறை கல்வி வலயத்திலும் தற்போது மூதூர் வலயக்கல்வி அலுவலகத்திலும் ஆசிரியர்களுடன், அதிபர்களுடன் தொடர்ந்து பிரச்சினைப்படுகிறார் என்றால் இவருக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றி கல்வியாளர்களும:, உளவியலாளர்களும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவரில் குற்றமா? அல்லது ஆசிரியர்களில் குற்றமா? என்பதனை தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் இவரது செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது அப்பாவி மூதூர் மாணவர்களும், ஆசிரியர்களும், அதிபர்களுமே ஆவர். அண்மையில் மூதூர் வலயப்பிரதேசத்தில் ஒரு ஆசிரியையுடனான பாலியல் தொடர்பிலும் சிக்கியிருந்தார். இதுவும் மூதூர் ஆசிரியர்களுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏட்டிக்குப் போட்டியாக மூதூர்ப்பிரதேசத்தில் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எதிராக ஆசிரியர்கள் போராடுகின்றனர். ஆதரவாக கட்டிட ஒப்பந்தக்காரர்களும், அவர்களது வேலையாட்களும் போராடுகின்றனர். இதன்மூலம் சமூகத்திற்கு சொல்ல வந்த செய்தி என்ன? என்பதனை எல்லோரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஜனாப். முக்தார் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top