அ.தி.மு.க.வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள் இன்று!
தமிழக சட்டப்பேரவையில் இன்று 18 ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. முதல்முறையாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஒரு அணியினரும், சசிகலாவின் ஆதரவுபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒரு அணியினருமாக, அ.தி.மு.க.வினர் பிரிந்து நிற்கின்றனர். இதில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுப்பவர் 116-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றால், தமிழகத்தின் உறுதிசெய்யப்பட்ட முதல்வராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியத்துக்குள் உறுதியான முதல்வர் யார் என முடிவுகள் தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment