தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்

தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இன்று தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியலை வழங்கினார்.
அதன்படி, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், சி.வி.சண்முகம் சட்டத்துறை அமைச்சராகவும், தங்கமணி மின்துறை அமைச்சராகவும், செல்லூர் ராஜு கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய பாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராகவும், ஜெயகுமார் மீன் வளத்துறை அமைச்சராகவும், எம்.சி.சம்பத் தொழில்துறை அமைச்சராகவும், சீனிவாசன் வனத்துறை அமைச்சராகவும் .எஸ். மணியன் கைத்தறித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று தமிழக அமைச்சரவையில் மொத்தம் 31 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

01.எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்
02.திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
03.செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை
04.செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை
05.தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு
06.வேலுமணி - உள்ளாட்சி துறை
07.ஜெயக்குமார் - மீன்வளத்துறை
08.சண்முகம் - சட்டத்துறை
09.அன்பழகன் - உயர்கல்வி
10.சரோஜா - சமூக நலத்துறை
11.சம்பத் - தொழில்துறை
12.கருப்பண்ணன் - சுற்றுசூழல்
13.காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்
14..எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
15.உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு
16.விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை
17.துரைக்கண்ணு - விவசாயத்துறை
18.கடம்பூர் ராஜூ- செய்தி துறை
19.உதயகுமார் - வருவாய்த்துறை
20.வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
21.வீரமணி - வணிக வரித்துறை
22.ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை
23.பெஞ்சமின் - ஊரக தொழில்துறை
24.நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை
25.எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
26.மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை
27.ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறைஅமைச்சர்
28.பாஸ்கரன் -காதித்துறை
29.சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை
30.வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
31.பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை

மொத்தம் 31 அமைச்சர்கள்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top