தமிழ்கத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும்
எடப்பாடி பழனிச்சாமி
யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி?
கருப்புசாமியின் மகன் எடப்பாடி பழனிசாமி, வயது 63. பி.எஸ்.சி., படித்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், மிதுன்குமார் (பி.இ.,) என்ற மகனும் உள்ளனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், நெருங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமியின் மகன் எடப்பாடி பழனிசாமி, வயது63.
இவர், பி.எஸ்.சி., படித்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், மிதுன்குமார் (பி.இ.,) என்ற மகனும் உள்ளனர். 1972ல், அ.தி.மு.க.,வில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளை செயலாளராகவும், 1983ல் ஒன்றிய இணை செயலாளராகவும், அ.தி.மு.க.,வில் பதவி வகித்தார். 1989ல், அ.தி.மு.க.,வில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. ஜெ., அணியில், இடைப்பாடி தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். 1991ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்வானார்.
கடந்த, 1996,
2006ல் நடந்த எடப்பாடி சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001ல், சிமெண்ட் வாரிய தலைவராகவும், பின்னர் அ.தி.மு.க., கொள்கைபரப்பு செயலாளராகவும் இவரை ஜெயலலிதா அறிவித்தார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றார். 1999, 2004ல் நடந்த லோக்சபா தேர்தல்களில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வில், சேலம் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த, சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த, 2016ல், நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக உள்ளார். மேலும், மாவட்ட செயலாளர் பதவியுடன், தலைமை நிலைய செயலாளர், கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு அணியும், பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சசிகலா மற்றொரு அணியாகவும் இருந்தனர். சசிகலாவை முதல்வராக கொண்டு வருவதற்கு, அமைச்சர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியதால், முதல்வர் பதவிக்கு சசிகலா போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. அதையடுத்து, சசிகலா அணியினர், அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பை தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார்.
0 comments:
Post a Comment