தமிழக சட்டசபையில் கடும் ரகளை:
செயலர் இருக்கை கிழிப்பு; மைக் உடைப்பு;
வாக்கெடுப்பும் திடீரென நிறுத்தப்பட்டது
சபை ஒத்திவைப்பு!
ரகசிய
வாக்கெடுப்பு நடத்த
வேண்டும் என
வலியுறுத்தி சபாநாயகர் தனபால் இருக்கையை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து ஆவேசமுற்ற
திமுக. எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின்
மேஜை, நாற்காலிகளை
அடித்து நொறுக்கினர்.
இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. மைக்குகளை எம்.எல்.ஏ.,க்கள் பிடுங்கி
எறிந்தனர்.
ரகசிய
வாக்கெடுப்பு வேண்டும்
எனவும் தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களும்,
பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கோஷம்
எழுப்பினர். தி.மு.க., எம்.எல்.ஏ.,
பூங்கோதை ஆலடி
அருணா, ரவிச்சந்திரனும்
இருக்கை மீது
ஏறி முழக்கமிட்டனர்.
காகிதங்களை கிழித்து எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் இருக்கை சேதமடைந்தது. மைக் உடைக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள், சபாநாயகர் தனபாலை பத்திரமாக அழைத்து சென்றனர். சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதமடைந்தது. தொடர்ந்து சட்டசபை மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த அமளிக்கிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பு திடீரென நிறுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment