ரைகம நகரில் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி
சிறப்பு வலயமொன்றைத் தாபிப்பதற்கு
அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
களுத்துறை மாவட்டத்தின் ரைகம நகரில் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை துரித கதியில் ஆரம்பிப்பதற்காக அவ்வலயத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை சாதாரண கொள்முதல் செயன்முறைக்கு புறம்பாக, அரச நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் உப கம்பனியான மத்திய பொறியியல் சேவைகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment