இறக்குமதி செய்யப்படும் அரிசி மீதான விசேட
வியாபார பண்ட அறவீட்டினை விலக்களிப்புச் செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
சந்தையில் அரிசி விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்தி, உள்ளூர் சந்தைக்கு தேவையான அரிசியினை வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், இறக்குமதி அரிசி ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்படுகின்ற 15 ரூபா விசேட வியாபார பண்ட அறவீட்டு வரியினை, 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 05 ரூபா வரை குறைப்பதற்கு 2007ம் ஆண்டு 48ம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள நியமங்கள் அடங்கிய, 2003 / 43 இலக்கமுடைய 2017-01-27ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment