சசிகலாவை, அவரின் கணவர் நடராஜன் கண்ணீர் மல்க,

சிறைக்குள் அனுப்பி வைத்தார்




சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற, சசிகலாவும், இளவரசியும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்று மாலை அடைக்கப் பட்டனர். சசிகலாவை, அவரின் கணவர் நடராஜன் கண்ணீர் மல்க, சிறைக்குள் அனுப்பி வைத்தார். சிறையில், சசிகலாவுக்கு, 3295 என்ற, கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.
.தி.மு.., தற்காலிக பொது செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் விதித்த, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட், நேற்று முன் தினம் உறுதி செய்தது. 'அவர்கள், உடனே பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்' எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சசிகலா உட்பட மூன்று பேரும், நேற்று முன் தினம் சரணடைவர் என, எதிர்பார்க்கப்பட்டது; இதற்காக, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட், 48வது அறை தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, நேற்று காலை, சென்னை யிலிருந்து சசிகலாவும், இளவரசியும் காரில் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று காலை, பெங்களூரு சிட்டி சிவில், 48வது கோர்ட் பதிவாளரிடம், சசிகலா உட்பட, மூன்று பேர் சார்பிலும் தாக்கல் செய்த மனுவில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சரணடைய வருகிறோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு பதிலாக, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு தற்காலிக நீதிமன்றத்தில், சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டது; இதற்காக, அந்த பகுதி துாய்மைப்படுத்தப்பட்டது.
நேற்று மதியம், 3:05க்கு, நீதிபதி அஸ்வத் நாராயண், தன் அறைக்கு வந்து, பணிகளை கவனித்தார். ஒரே காரில் வந்த சசிகலாவும், இளவரசியும், மாலை, 5:20க்கு, நீதிபதி முன் சரணடைந்தனர்; சுதாகரன் சரணடைய வில்லை. அவர் சரணடைய ஒரு நாள் அவகாசம் வேண்டும் என, அவரது வழக்கறிஞர் கேட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, விரைவில் சரணடைய வேண்டும் என, உத்தரவிட்டார்.
பின், மருத்துவ பரிசோதனை உட்பட, சிறை நடைமுறைகள் முடிந்த பின், சசிகலாவும் இளவரசியும் சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரது முகமும் வியர்த்து கொட்டியது. சசிகலா, ஒருவித நடுக்கத்துடன் காணப்பட்டார். சசிகலாவை, அவரது கணவர் நடராஜன், கண்ணீர் மல்க சிறைக்குள் அனுப்பி வைத்தார்; சசிகலாவும் கண்ணீர் சிந்தினார். சிறையில், சசிகலாவுக்கு, 3295 என்ற, கைதி எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த எண், மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று மாலை, 6:37க்கு சுதாகரனும் சரணடைந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்த பின், அவரும் சிறையில்அடைக்கப்பட்டார்.
வீட்டு சாப்பாடு நீதிபதி நிராகரிப்பு
கோர்ட்டில் சரண் அடைந்த சசிகலா, இளவரசி தரப்பில், சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. சிறை உணவுக்கு பதிலாக, வீட்டு உணவு மற்றும் தனி டாக்டர் வசதி செய்து தரும்படி கோரினர்; இதை, நீதிபதி நிராகரித்தார்.
அதேபோல், ' கிளாஸ்' அறை வேண்டுமென கேட்டபோது, இந்த விவகாரம், தன் எல்லைக்குள் வராது என்றும், சிறை அதிகாரிகளிடம் முறையிடும்படியும் நீதிபதி கூறினார். சிறையில், இருவரையும் ஒரே அறையில் தங்க அனுமதிக்கும்படி, சிறை அதிகாரியிடம் கோரினர். இதை, அவர் ஏற்றதாக கூறப்படுகிறது.

காலை, 7:00 மணி:இரண்டு சப்பாத்தி, 250 மி.லி., சாம்பார், 100 மி.லி., காபி,

பகல், 11:00: சாதம், 400 கிராம் அல்லது 400 கிராம் கேழ்வரகு களி, சாம்பார், 200 மி.லி., மோர்

மாலை, 5:00:கலவை சாதம்

இவை தவிர, மூன்று ஜோடி வெள்ளை சேலை, ஒரு தட்டு, ஒரு சொம்பு, ஒரு கிண்ணம் வழங்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top